மும்பை : மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் இன்று வாக்குமூலம் அளித்தான். அதில் எனக்கும் மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளான். மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் இருக்கும் சிறப்பு கோர்ட்டில் அவன் வாக்குமூலம் அளித்தான். கோர்ட் உத்தரவுப்படி இந்த வாக்குமூலம் டேப் செய்யப்பட்டது.
சினிமா ஆசை : சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இந்தியா வந்ததாக அஜ்மல் கசாப் கூறியுள்ளான். 20 நாள் விசாவில் இந்தியா வந்த தன்னை போலீசார் நவம்பர் 25ம் தேதி இரவே கைது செய்துவிட்டனர் என்றான். மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளான்.
சித்திரவதை : மும்பை தாக்குதல் வழக்கை நீதிபதி தஹிளியானி விசாரித்து வருகிறார். வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 250க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதலில் தனது தவறுகளையும் எல்லாம் ஒப்புக் கொள்வதாக தெரிவித்திருந்த கசாப். தற்போது இவ்வாறு அந்தர்பல்டி அடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்திரபதி சிவாஜி நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக என்னை துன்புறுத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றனர் என கூறியுள்ளான்.
Leave a Reply