அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார் நிலையில் ஏமனில் உள்ளதாக எஃப்.பி.ஐ. விசாரணையில் நைஜீரிய பயங்கரவாதி ஒமர் பாரூக் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளான்.
கடந்த 25ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு வந்த அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்கும் சதிச் செயலை மேற்கொள்ள திட்ட தீட்டிய குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ஒமர் பாரூக் அப்துல் முத்தலிப் கைது செய்யப்பட்டான்.
அமெரிக்க புலனாய்வுத் துறையினர் (எஃப்.பி.ஐ) அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், “அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஏராளமான மனித குண்டுகள் ஏமன் நாட்டில் காத்திருப்பதாகவும், விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும்” முத்தலிப் விசாரணையில் கூறியதாக ஏ.பி.சி. நியூஸ் தெரிவித்துள்ளது.
Leave a Reply