புதுடில்லி: இந்தியாவில் துவக்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை காட்ட வேண்டிய கையிருப்பு ‘தொகுப்பு’ நிதி அளவை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும்போது அவற்றிடமிருந்து ‘கார்பஸ்’ நிதி (ஆபத்துக் கால நிதி) மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும். ஒருவேளை பல்கலையால் தொடர்ந்து நிர்வாகம் நடத்த முடியாத சூழல், அதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் நிலை போன்ற எதிர்பாராத நேரங்களில், பல்கலை செலுத்தும் அந்தத் தொகை, மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசால் பயன்படுத்தப்படும். பல்கலையின் பிடிமானத் தொகை என்றும் அதைக் குறிப்பிடலாம்.
அவ்வகையில், வெளிநாட்டிலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளன. 2007ல் அர்ஜுன் சிங் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கார்பஸ் நிதி 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, மத்திய நலவாழ்வுத் துறை, அந்த நிதியை ஐந்து மடங்காக உ<யர்த்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது. மனிதவளத் துறையும் அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் 50 கோடி ரூபாய் கார்பஸ் நிதியாக செலுத்த வேண்டி வரும். அந்த பல்கலைகளின் இந்தியக் கிளைகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைகளின் தவறான செயல்பாடுகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க இந்த நிதி உ<தவும். பல்கலை இழுத்து மூடப்பட வேண்டிய நிலை வருமானால், அப்போது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், மாணவர்களின் எதிர்காலப் படிப்புக்கு உதவவும், இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்தும். கார்பஸ் நிதியின் அசல் தொகையில் பல்கலைகள் கைவைக்க முடியாது. அசலுக்கு வரும் வட்டியில் 75 சதவீதம் பல்கலையில் முதலீடு செய்யப்படும். மீதி 25 சதவீதம், அசலில் சேர்க்கப்படும். ‘வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (பல்கலைகளின் துவக்கம் மற்றும் செயல்பாடு ஒழுங்குமுறை) -2009’ என்ற மசோதாவில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மனிதவளத்துறையால் மத்திய அமைச்சரவையில் ஒப்புதலுக்கு அளிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்கள் கமிட்டிக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டு, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது. மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், இந்தியக் கல்வி முறை இவற்றுக்கு பாதகமாக இந்த மசோதாவில் உள்ள சில விதிகளை நீக்கச் சொல்லி பிரதமர் அலுவலகம் மனிதவளத் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது. அநேகமாக பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம். இந்த மசோதா சட்டமானால், மாணவர்களை ஏமாற்றும் போலி பல்கலைக்கழகங்கள் வரவிடாமல் தடுக்க முடியும்.
Leave a Reply