மதுரை : “”மின்சாரம் தயாரிப்பதற்கான “சோலார் பிளான்ட்’களை, ஒரே ஒருமுறை மட்டும் அமைத்தால், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு, தினமும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளித்தரும்,” என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மதுரை மண்டல துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சூரியசக்தியின் மூலம் மின்உற்பத்தி தயாரிக்கும் “சோலார் பவர் பிளான்ட்’களுக்காக, மத்திய அரசு, நேரு தேசிய சோலார் மிஷனை அமைத்துள்ளது. இதற்காக 3,337 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தர்மபுரி, கன்னியாகுமரி பகுதிகளில் வெப்பம் அதிகம். இங்கு “பிளான்ட்’களை அமைக்கலாம்.
ஐந்து ஏக்கர் இடத்தில், ஒரு “மெகாவாட்’ மின்உற்பத்தி செய்யலாம். இந்திய நிபுணர்கள் மூலம் 15 – 18 கோடி ரூபாய்க்குள் “பிளான்ட்’ அமைக்கலாம். மொத்த முதலீட்டில் 80 சதவீத கடனை வங்கியில் பெறலாம். அதிகபட்சமாக ஆறே மாதத்தில் “பிளான்ட்’ அமைத்து, மின்உற்பத்தியை துவங்கலாம்.
ஒரு சதுர மீட்டருக்கு ஒரு “பேனல்’ வீதம், 5 ஏக்கரில் 22 ஆயிரம் “பேனல்’களை அமைக்க வேண்டும். ஒரு “பேனலுக்கு’ 6 யூனிட் வீதம், 22 ஆயிரம் “பேனல்’களிலிருந்து ஒரு நாளைக்கு, ஒரு லட்சத்து 32 ஆயிரம் யூனிட் மின்உற்பத்தி செய்யலாம்.
மானியம்: உற்பத்தி ஆரம்பித்த, முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 17.50 ரூபாய் வீதம், மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதுதவிர, ஒரு யூனிட் 4.50 ரூபாய் வீதம், மாநில அரசிடம் மின்சாரத்தை விற்கலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு ஆறு லட்ச ரூபாய் கிடைக்கும். ஐந்தே ஆண்டுகளில் மொத்த கடனை அடைத்துவிடலாம்.
செலவு குறைவு: மற்ற “பிளான்ட்’களை அமைப்பதை விட, குறைவான காலத்தில் அமைத்துவிடலாம். இயக்குவதற்கு ஆட்கள் தேவையில்லை. மிகக்குறைந்த பராமரிப்பு. வெப்பத்தை கிரகித்து மின்உற்பத்தி செய்வதால், தேவையற்ற வாயுக்கள் வெளிவராது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயமும் இல்லை. அனைத்து “பிளான்ட்’களும், தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் அமைக்கப்படுவதால், “பிளான்ட்’ அடியில் சிறு பயிர் வகைகளை பயிரிடலாம்.
காற்றாலை அமைக்கப்பட்ட இடத்திலும், ” சோலார் பிளான்ட்’ அமைக்கலாம். ஆனால், இதிலிருந்து வெளிவரும் “டிசி’ மின்சாரத்தை “ஏசி’ மின்சாரமாக மாற்ற, “இன்வெர்ட்டர்’ பொருத்தினால் போதும். “சோலார் பிளான்ட்’ அமைப்பதற்கான ஆலோசனைகளை, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை வழங்கும். இவ்வாறு சையது அகமது கூறினார்.
balamurugan
I have an idea of putting solar system for my house.. i need 850 watts for my home. so i nedd a details about the solar system. i am in coimbatore and i need a total estimate and reduction from our government. i need address of the solar system too. i request you to respond to this as soon as you can…
contact me at: 9944887746