சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பொதுத் துறை நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இங்கு பணியாளர்கள் தேர்வு சென்ற டிசம்பர் 2ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெறும்.ஓ.என்.ஜி.சி.சென்ற கல்வி ஆண்டில் 35 மாணவர்களை தேர்ந்தெடுத்த, ஓ.என்.ஜி.சி., பீ.எச்.இ.எல்., என்.டி.பி.சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளன. இவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.5-7.6 லட்சம் (மாதச் சம்பளம் ரூ.41,660 – 63,333) சம்பளம் வழங்கப்படும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுத் துறை நிறுவனங்களில், பீ.எச்.இ.எல். நிறுவனம் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதனையடுத்து, அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கியதில் இந்நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் பணியாளர்கள் தேர்வில் தீவிரமாக இறங்கி இருப்பது குறித்து ஐ.ஐ.டி.யின் (சென்னை) கல்வி விவகாரங்கள் துறை செயலாளர் எம்.கார்த்திக் கூறும்போது, ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, தனியார் துறை நிறுவனங்களையும் விஞ்சிடும் வகையில் பொதுத் துறை நிறுவனங்கள் அதிக சம்பளம் வழங்கி வருகின்றன என்று தெரிவித்தார். இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு, சென்ற ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply