சவுதி அரேபிய விசா பெற போலீஸ் சான்றிதழ் தேவை

posted in: உலகம் | 0

wl232துபாய்: சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய வேண் டும். அப்போதுதான் சவுதி விசா கிடைக்கும். புதிய நிபந்தனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.


இப்புதிய நிபந்தனையை இந்தியாவில் உள்ள சவுதி அரேபியா தூதரகங்கள் இந்திய பாஸ்போர்ட் அ லுவலகங்களுக்கும் சவுதி அரேபியாவுக்காக இந்தியர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் ஏஜெ ன்சி நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளன.

இந்த சான்றிதழ்களை காவல் நிலையம் விரும்பினால் பாஸ்போர்ட் அலுவலகங்களே வழங்கும். அவ் வாறு வழங்கப்படும் சான்றிதழில் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மேல்சான்று ஒப்பமிட வேண்டும். அந்தச் சான்றிதழில் இறுதியாக சவுதி வெளியுறவு அமைச்சகமும் கையெழுத்திட வேண்டும். இந்திய அரசின் சம்மதத்தின் பேரில்தான் இந்த புதிய நிபந்தனை அமலுக்கு வருகிறது. இனி சட்ட த்தை மதித்து நடக்கும் இந்தியர்கள் மட்டுமே சவுதிக்கு பணியாற்ற வரமுடிம். மேலும் சவுதியில் உள்ள இந்திய சமூகத்தினரில் குற்றவாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என துபாயில் உள்ள இந்திய தூத ரக அதிகாரி ஒருவர் கூறினார்.

சவுதி அரேபிய சிறையில் உள்ள சுமார் 1300 இந்தியர்களின் தண்டனை காலம் முடிந்ததும் அவர் கள் இந்தியாவுக்கு அனுப்பப் படுவார்கள். இதற்கான ஒப்பந்தமும் இரு தரப்பு சம்மதத்துடன் தயாரிக் கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் சவுதியில்தான¢ மிக அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் சிறையில் உள்ளனர். இரண்டாவது இடம் ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு. அங்கு 1221 இந்தியா¢ சிறையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *