லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு

8636090லண்டன் : கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் இருந்த மூத்த அதிகாரிகளில் 10 சதவீதத்தினர் அதாவது 17000 பேர், இன்சால்வென்ஸி, விஆர்எஸ் போன்ற பல்வேறு காரணங்களால் வேலை இழந்திருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை தனிப்பட்ட நபர்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாகவும், பெரும் நிறுவனங்களில் பதவி இழந்த பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நிதித் துறையில் மட்டுமே இந்த இரு ஆண்டுகளில் 48000 அதிகாரிகள் வேலை இழந்துள்ளனர். அதே நேரம், பிரிட்டனில் இன்னும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறி தெரியவில்லை என ஐஎம்ஏஎஸ் கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *