விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மார்ச் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டடம் கட்டி முடியும் தருவாயில் உள்ளது. கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார். இதன் திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வருவதையொட்டி பந்தல் மற்றும் விழா மேடை அமைப்பது குறித்து கலெக்டர் பழனிசாமி மற்றும் ஒப்பந்ததாரருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில்,” மார்ச் மாதம் 7ம் தேதி காலை 10 மணியளவில் விழுப்புரத்தில் கட்டப்படும் தி.மு.க., அறிவாலயத்தை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கின்றனர். மாலை 4 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், தி.மு.க., நிர்வாகிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்’ என்றார்.
Leave a Reply