கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முப்படை தலைவர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகி, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார்.
இதனையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வி அடைந்தார். மேலும் அதிபர் ராஜபக்ஷேவை கொல்ல சரத் பொன்சேகா சதித் திட்டம் தீட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த சரத் பொன்சேகாவிற்கும், அதிபர் ராஜபக்ஷேவிற்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவியது.
இந்நிலையில் அவர் நேற்றிரவு திடீரென கைது செய்யப்பட்டார். அவருடன் மீடியா செயலர் செனகா டி சில்வாவும் ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சரத் பொன்சேகாவை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கவும் ராணுவம் முடிவெடுத்துள்ளதாக என அரசூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply