இங்கிலாந்தில் உள்ள ஒரு இணைய தளம் மனி தர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. 3 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் முடக்கு வாதம் போன்ற உடல் வலி நோயினால் அவதிப்படுவது தெரிய வந்தது. இது ஒருவரை ஆண்டுக்கு 19 தடவை பாதிக்கிறது. ஆயுளில் 1492 முறை இந்த நோயினால் அவதிப்படும் வாய்ப்பு உள்ளது.
ஆயுளில் 1256 தடவை தலைவலியாலும் 1099 முறை முதுகுவலியாலும் அவதிப்படுகின்றனர்.
707 தடவை தசை பிடிப்பினாலும் கண் எரிச்சல், மார்பு எரிச்சல் உள்ளிட்ட பல நோய்களினால் 6284 தடவையும் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.
இருந்தும் மனிதனின் சராசரி ஆயுள் 78.5 வயது இருக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply