சிதம்பரம் : தவிட்டில் இருந்து எரிவாயு எடுக்கும் முறையை சிதம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனுடைய மாணவர் கண்டுபிடித் துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி பிளாக் 84, முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். ஊனமுற்ற இவர் அண்ணாமலை பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.எஸ்.சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது, சிதம்பரத்தில் உறவினர் வீட்டில் தங்கி படித்துவரும் நாகராஜன், சிதம்பரம் பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் தவிட் டில் இருந்து எரிவாயு கண்டுபிடிக்க முடியுமா என சோதனையில் இறங்கினார். அதன் பலனாக எரிவாயு கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ளார். இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி, அதை சூடு படுத்தியவுடன், டப்பாவில் ஒரு பக்கத்தில் அமைத்துள்ள சிறிய குழாய் வழியாக காஸ் வெளியேறியது. அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீலக்கலரில் எரிந்தது. இந்த எரிவாயுவை சிலிண்டரில் அடை த்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும் என்றும் நாகராஜன் தெரிவித்தார்.
Leave a Reply