திருப்பூர்: உலக அமைதியை வலியுறுத்தி, திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவன் வரைந்த ஓவியத்துக்கு, உலகளவில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
திருப்பூர் லயன்ஸ் கிளப் சார்பில் கடந்த ஆண்டு நவ., 16ம் தேதி காமாட்சி அம்மன் மண்டபத்தில், “அமைதியின் வலிமை’ என்ற தலைப்பில் பள்ளிகளுக்கு இடையே பன்னாட்டு ஓவியப்போட்டி நடந்தது. 20 பள்ளிகளைச் சேர்ந்த 226 மாணவர்கள் பங்கேற்றனர். செஞ்சுரி பவுண்டேசன் ஏழாம் வகுப்பு மாணவன் சங்கர் வரைந்த ஓவியம் தேர்ந் தெடுக்கப்பட்டது.
இதேபோல், நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டியில் தேர்வு செய்யப் பட்ட ஓவியங் களில், சங்கரின் ஓவியம், இந்தியாவில் மிகச்சிறந்த ஓவியமாக தேர்ந் தெடுக்கப்பட்டது. அந்த ஓவியம், உலகளாவிய தேர்வுக்காக அமெரிக்காவில் உள்ள லயன்ஸ் கிளப் தலைமையிடத்திற்கு அனுப்பப்பட்டது. உலக அளவில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். அதன் முடிவு, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அப்போட்டியில், உலக அளவில் மொத்தம் இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு 2,500 அமெரிக்க டாலர்களை தைவான் நாட்டு மாணவிக்கும், இரண்டாம் பரிசாக “மெரிட் அவார்டு’ மற்றும் 500 அமெரிக்க டாலர், இந்திய மாணவன் சங்கருக்கும் கிடைத்துள்ளது. உலக அளவில் வெற்றி பெற்ற மாணவன் சங்கர் மற்றும் பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் லட்சுமணன் ஆகியோரை, தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் டோரத்தி ராஜேந்திரன், துணை முதல்வர் கணேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
Leave a Reply