வாஷிங்டன், பிப்.20: இந்தியாவில் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் சீரிய நடவடிக்கைகளே காரணம் என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளாக் கூறியதாவது:
÷இந்திய கல்வித் துறையில் அயல்நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் சட்ட மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என கபில் சிபல் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இந்திய கல்வி துறையில் குறிப்பாக உயர் கல்வி துறையில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.
÷இந்தியாவில் ஏறத்தாழ 22 கோடி பேர் மேல்நிலை வகுப்பு படிக்கின்றனர். ஆனால் இவர்களில் 1 கோடி பேர் மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடிகிறது. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அமெரிக்க கல்வி நிறுனங்களில் படிக்கின்றனர்.
இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதின் மூலம் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இந்திய மாணவர்களுக்கு தங்களது பங்களிப்பினை அளிக்க முடியும்.
பொதுவான ஆராய்ச்சி மற்றும் கலை பிரிவுகள் மட்டுமின்றி சமூகம், இதர கல்வி பிரிவுகள், தொலைதூர கல்வி உள்பட அனைத்து கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பங்களிப்பினை அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அளிக்கும் என பிளாக் தெரிவித்தார்.
÷இந்திய-அமெரிக்க உறவுகளில் கல்விக்கு முக்கிய இடம் தரப்படுகிறது.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியா சிறப்பான அறிவு சார்ந்த சமூகத்தை கொண்டிருக்கிறது. இவர்களுக்கு சிறப்பான மற்றும் செயல்வழியிலான கல்வி அளிப்படுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று பிளாக் தெரிவித்தார்.
÷ இதற்காக கபில் சிபல் மேற்கொண்டு வரும் கல்வித்துறை சீர்திருத்த முயற்சிகளை அமெரிக்கா பாராட்டுவதாக ராபர்ட் பிளாக் தெரிவித்தார்.
Leave a Reply