பஸ் கட்டணம் உயருமா? அமைச்சர் நேரு பதில்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_19942873717அரியலூர் : “”தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது,” என, போக்குவரத்து அமைச்சர் நேரு கூறினார். அரியலூர் மாவட்டம் திருமானூரில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து துவக்க விழா நடந்தது.

அரியலூர் – மதுரை, அரியலூர் – பழனி, ஜெயங்கொண்டம் – தஞ்சாவூர் உட்பட புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு பேசியதாவது: பொதுமக்களின் பஸ் போக்குவரத்தை நிறைவு செய்யும் வகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 500 பதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 3,000 புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஏற்படும் டீசல் விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிக அளவு நஷ்டம் ஏற்படுகிறது. எந்த அளவு நஷ்டம் ஏற்பட்டாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும், அதனால், ஏற்படும் நஷ்டத்தை தமிழக அரசு ஈடு செய்யும் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எனவே தற்போதைய டீசல் விலை உயர்வால், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது. இவ்வாறு நேரு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *