லண்டன்: விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
பிரிட்டன், மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் செல்லும் விமானம், நேற்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது, அந்த விமானத்தில் செல்லவிருந்த முஸ்லிம் பெண்கள் இருவரை, விமான நிலைய அதிகாரிகள் ஸ்கேன் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.
மருத்துவ மற்றும் மத ரீதியான காரணங்களைக் கூறிய, அந்தப் பெண்கள் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்தனர். இதனால், அவர்களை விமானத்தில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இரு பெண்களும், தங்களது பயணத்தை ரத்து செய்தனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளை முழுவதுமாக ஸ்கேன் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை பல அமைப்புகள் குறை கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply