புதுடில்லி : புதிதாக மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் துவங்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெருவதில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை துணை அமைச்சர் ஜித்தின் பிரசாதா இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பீனாவில் கட்டப்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரும் செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்கும். பதிந்தா, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுவரும் மேலும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த ஆண்டில் செயல்படத் துவங்கும். பீனா சுத்திகரிப்பு நிலையம் முழு அளவில் செயல்படத் துவங்கியவுடன் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு பெருமளவிற்கு குறைந்துவிடும் எனவும் ஜிதின் பிரசாதா கூறினார். இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகரித்துவரும் உற்பத்தியின் காரணமாக இறக்குமதி குறைந்துள்ளது என்றும் பிரசாதா கூறினார்.
Leave a Reply