மெல்போர்ன்: ஆஸ்திரேலியா [^]வில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்திக் கொலை [^] செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன் அருகே குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 3 வயதான அந்தக் குழந்தையின் பெயர் குர்ஷன் சிங். தனது பெற்றோருடன் விடுமுறைக்காக வந்திருந்தான்.
லாலோர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் காணாமல் போனான் குர்ஷன் சிங். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த நிலையில், மெல்போர்ன் விமான நிலையத்திற்கு 30 கிலோமீட்டர் தொலைவில், ஒரு புல்வெளியில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இனவெறிப் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருப்பதால் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பு நிலவுகிறது.
எப்படி இந்த சிறுவன் கொல்லப்பட்டான் என்பது குறித்த தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலையாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply