சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து 300 பேர் தேர்வாகி சாதனை

posted in: மற்றவை | 0

tblfpnnews_23958551884சென்னை : மத்திய பொதுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.

மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்திய 2009ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், 13 ஆயிரத்து 837 பேர் தேர்வெழுதினர்; இதில், தமிழகத்திலிருந்து 637 பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப் பட்டன. நாடு முழுவதிலுமிருந்து, 2,281 பேரும், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோரும், நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெற் றுள்ளவர்கள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளில், பணிபுரிய தகுதியுடையவர்கள்.

சிவில் சர்வீஸ் துறையில் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 500 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது வெற்றிபெற்றவர் களுக்கான இறுதிகட்ட நேர்முகத் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்வு, வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையும், இரண்டாம் கட்டத் நேர்முகத் தேர்வு, ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. நேர்முகத் தேர்வுகள் அனைத் தும், டில்லியில் உள்ள மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும், நேர்முகத் தேர்விற்கான நாள் மற்றும் நேரம் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும், தேர்வாணையத்தின் www.upsc.gov.in என்ற இணையதளத் தில், மார்ச் 16ம் தேதி வெளியிடப் படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தேர் வாணையத்தின் இணையதளத்திலிருந்து அதற்கான படிவத்தை, “டவுண்லோடு’ செய்யலாம். பூர்த்தி செய்த படிவத்தை விரைவுத் தபால் மூலம், “உதவிச் செயலர், எண் 432, அயோக் சச்சிவாலையா பில்டிங், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ஷாஜகான் சாலை, நியூ டில்லி’ என்ற முகவரிக்கு, தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்விற்கான தகவல் கிடைக்கப் பெறாதவர்கள், தேர்வாணைய அலுவலகத்தை கடிதம் அல்லது 011- 2338 5271, 2338 1125 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஆர்வம், இளைஞர்கள் மத்தியில் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு, இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பேரும், 2009ல், இரண்டு லட் சத்து 75 ஆயிரம் பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *