ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறை

posted in: மற்றவை | 0

மோகா: (பஞ்சாப்) ; பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் பாம்பியாபாய் கிராமத்தில் வசிக்கும் புக்கர்சிங் மகள் வாசுகி ( பெயற் மாற்றப்பட்டுள்ளது) .

இவரை இதே பகுதியை சேர்ந்த ஜஸ்பீர்சிங் ராணுவத்தில் பணியாற்றி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார், இவர் கடந்த 2007 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 2 ம் தேதி சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், ஜஸ்பீர் சிங்கிற்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 4 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அநுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *