மும்பை: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்த தீட்டப்பட்ட சதி திட்டத்தை தீவிரவாத தடுப்புப் படையினர் முறியடித்தனர்.
மும்பையில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் டாங்கிகள் கொண்ட கிடங்கின் அருகே இன்று காலை இரண்டு நபர்களை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது [^] செய்தனர்.
அவர்கள் இருவரும் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கிடங்கு மீது வெடிகுண்டுகளை வீசி பெரும் சேதாரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இருவரையும் கைது செய்துள்ள மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், அவர்களை மஸாகுவான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
Leave a Reply