சென்னை : டெபாசிட் வட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(ஐ.ஓ.பி.,) மாற்றியமைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் வட்டியை இவ்வங்கி மாற்றி அமைத்துள்ளது.
இந்த மாற்றத்தின் படி, 270 நாள் முதல் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு 6 சதவீதம், ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுக்கும் குறைந்த காலத்துக்கு 6.75 சதவீதம், 5 ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு 7.25 சதவீதம். ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஒரு ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு 6.50 சதவீத வட்டி என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும், ஒய்வு பெற்றவர்களின் ரூ.25 லட்சம் வரையிலான டெபாசிட்டுக்கு 0.75 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Leave a Reply