லண்டன்: வேளா வேளைக்கு கொடுக்கும் ஐட்டங்களை சாப்பிட்டு விட்டு சும்மா இருப்பதற்கு சம்பளம் ரூ.20 லட்சம். இப்படி ஒருவரை ஆள் தேடுகிறது இங்கிலாந்து நிறுவனம். லண்டனை சேர்ந்த நிறுவனம் புரோஆக்டல்.
அது உடல் எடைக் குறைப்புக்கான உணவு தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. அதன் உணவு ஆராய்ச்சிக்காக ஆள் தேவை என்று சமீபத்தில் லண்டன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது.
அதில் கூறுகையில், “இது சிறந்த வேலை என்பது எங்களுக்குத் தெரியும். தினமும் பசிக்கும்போது வீட்டில் என்ன செய்கிறீர்களோ அதை எங்கள் அலுவலகத்திலும் செய்தால் போதும். வாரத்துக்கு 16 சதவீத கலோரிகள் மட்டும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். தினசரி 400 கலோரிகள் கூடுதல். இந்த வேலைக்கு ரூ.20 லட்சம் சம்பளம் தருகிறோம்” என்கிறது. பொருத்தமான நபர், ஏற்கனவே உடல் எடையைக் குறைக்கவோ, ‘சிக்’கென வைத்திருக்கவோ டயட்டில் இருக்கக்கூடாது என்பதே விதிமுறை. மீன், சிப்ஸ், பீட்சா, மெக்டொனால்டு ஐட்டங்கள் உங்களது டயட்டில் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்றும் விளக்குகிறது விளம்பரம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அந்த ஊழியர் வீட்டில் இருந்தபடி பணியாற்றலாம். வீட்டுக்கே உணவு அனைத்தும் சப்ளை செய்யப்படும் என்றும் ப்ரோஆக்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. அலுவலகத்துக்கு வேலைக்காக(!) வரும் காலத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. கொழுப்புச் சத்து அறவே இல்லாத சத்தான உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் இப்படி ஒரு வேலையை அளிக்கிறது ப்ரோஆக்டல் நிறுவனம்.
Leave a Reply