மும்பை: மும்பை பங்குச் சந்தையில், வங்கிகளின் பங்குகள் சரிந்துள்ளன.
குறுகிய கால கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டியை ரிசர்வ் வங்கி கால் (25%) விழுக்காடு அதிகரித்துள்ளதால், வங்கி பங்குகள் சரிவினை காண தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், நாட்டின் மிகபெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பங்குகள் 3.53 சதவீதம் சரிந்து ரூ. 921.10க்கும், மிகபெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வங்கி பங்குகள் 2.51 சதவீதம் சரிந்து ரூ. 2,014.20க்கும் வர்த்தகமாயின.
இதுதவிர, யெஸ் வங்கி பங்குகள் 1.46 சதவீதம் சரிந்தும், ஆக்சிஸ் வங்கி பங்குகள் 1.44 சதவீதம் சரிந்தும், பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 1.61 சதவீதம் சரிந்தும், இண்டஸ்யின்ட் வங்கி பங்குகள் 3.60 சதவீதம் சரிந்தும் காணப் பட்டன.
ஓரியன்டட் வங்கி பங்குகள் 2.42 சதவீதம் சரிந்தும், யூனியன் வங்கி பங்குகள் 0.11 சதவீதம் சரிந்தும், ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் 0.57 சதவீதம் சரிந்தும் காண பட்டன.
Leave a Reply