சென்னை: ‘பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் ஒப்பந்தங்கள் செய்யவில்லை’ என, ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் காய திருப்பதி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் பவள விழாவையொட்டி, சென்னை பிராட்வே யூனியன் வங்கியில், பழைய நோட்டுகளை மாற்றும் முகாம் கடந்த 10ம் தேதி நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் மாஜி, 100 கோடி பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் இந்த ஆண்டிற்குள் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியதாக, செய்திகள் வெளியாயின. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் காய திருப்பதி வெளியிட்டுள்ள விளக்கத்தில்,’பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து ஆர்டர் எதுவும் வழங்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.
Leave a Reply