கோல்கட்டாவில் பயங்கர தீ ; 4 மாடி கட்டடத்தில் பலர் சிக்கினர் ; பேரழிவு மீட்பு படையினர் விரைவு

posted in: மற்றவை | 0

tbltopnews1_93117487431கோல்கட்டா: மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் நகரின் மையப்பகுதியில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் பலர் சிக்கியிருப்பதாகவும் இவர்களை மீட்கவும் , தீயை அணைக்கவும் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோல்கட்டாவில் பார்க் ஓட்டல் அருகே ஸ்டீபன் ஹவுஸ் என்ற 4 மாடிக்கட்டடம் உள்ளது.வர்த்தக கட்டடமான இங்கு பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு தீடிரென தீப்பற்றி எரிந்தது. தீ மள , மள வென பரவியதால் கட்டடத்தில் இருந்தவர்கள் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலர் மாடிக்கட்டடத்தில் இருந்து ஏணிகள் மூலம் இறங்கியபடி உள்ளனர். சில பிணங்கள் மீட்கப்பட்டுள்ளது. பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நக்சல்கள் தாக்குதல் காரணமாக பல பிரச்னைகளை சந்தித்து வரும் மேற்குவங்கத்தில் இன்றைய தீ விபத்து கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கட்டடத்தில் தீ பெரும் உயரமாக எரிந்து வருகிறது. அருகில் உள்ள வளாகங்களுக்கு பரவாமல் தடுக்க முழு நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் இறங்கியுள்ளனர்.

தீப்பிடித்த கட்டடம் அருகே பொதுமக்கள் பலர் குவிந்திருப்பதால் மீட்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தீ பிடித்ததற்கான காரணம் குறித்து முழு தகவல்கள் எதுவும் அறியப்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ பிடித்திருக்கலாம் என்றும், லிப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *