சென்னை : சென்னையில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடத்தை, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி மறுத்தது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பரங்கிமலை, பல்லாவரம் பகுதியில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம், 1932ம் ஆண்டு ஈஸ்வர அய்யர் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. தற்போது, வெங்கடேஷ் என்பவர் வசம் குத்தகை நிலம் உள்ளது. குடியிருப்புக்காகத் தான் இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டது.குடியிருப்பு இடத்தை வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி கோரி, பாதுகாப்பு அமைச்சகத்திடம் வெங்கடேஷ் விண்ணப்பித்தார். இதை, பாதுகாப்புத் துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், வர்த்தக நோக்கத் துக்கு இடத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 90 ஆண்டுகளுக்கு இந்த குத்தகையை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கண்டோன்மென்ட் போர்டு, அப்பீல் மனுக் களை தாக்கல் செய்தது.
இதை நீதிபதிகள் தர்மா ராவ், பால் வசந்தகுமார் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:தாஜ் குரூப் ஓட்டல் கட்டுப்பாட்டில் உள்ள ஓரியன்டல் ஓட்டல் நிறுவனத்துக்கு, இடத்தின் பயன் பாட்டை மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஓரியன்டல் ஓட்டல் நிறுவனத்தை மனுதாரருடன் ஒப்பிட முடியாது. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விமானப் பயணிகளின் தேவைக் காக சிறப்பு தேர்வாகக் கருதி, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பொது நோக்கத்துக்காக அது பரிசீலிக்கப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை பொறுத்தவரை, அது தனிப்பட்ட நோக்கத்துக்காக பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்காததை தெரிவிக்காமல், கோர்ட்டில் இடைக்கால உத்தரவை மனுதாரர் பெற்று, கட்டடத்தை கட்டும் பணியை துவங்கியுள்ளார்.
இது, சட்ட விரோதமானது.எனவே, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறாமல், கட்டடம் கட்டுவதற்கு பிளான் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள் ளது. அனுமதியின்றி கட் டப்பட்ட கட்டடம் இடிக் கப்பட வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த அப்பீல் மனுக்கள் ஏற்கப்படுகிறது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது; ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply