இளநிலை பட்டதாரிகள் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றலாம்’

posted in: கல்வி | 0

tblgeneralnews_83861941100சென்னை:தற்காலிக விரிவுரையாளர்கள் திட்டத்திற்கு, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது,” என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் பலவற்றில் 100க்கும் மேற்பட்டவர்கள், முழு நேர முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டே விரிவுரையாளர்களாகவும் பணிபுரிந்தது அண்மையில் தெரிய வந்தது.

அவர்களில் பெரும் பாலானோர் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளதால், அவர்கள் தங்கள் முதுநிலை பட்டப் படிப்பை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டாண்டு எம்.இ., முழு நேர படிப்புக்கு பதிலாக, மூன்றாண்டு பகுதி நேர படிப்பை முடிக்க வேண்டும்.இளநிலை பட்டதாரிகள், மூன்றாண்டுகள் வரை தற்காலிக விரிவுரையாளர்களாக பணி புரியலாம் எனவும், அதற்குள் முதுநிலை பட்டப்படிப்பு முடிப்பவர்கள், முழு நேர விரிவுரையாளர் ஆகலாம்.

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில், தற்போது, தற்காலிக விரிவுரையாளர்’ திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இளநிலை தொழில் நுட்ப பட்டம் பெற்றவர்கள், கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக பணியாற்ற லாம். அதே நேரத்தில், அவர்களது முதுநிலை பட்டப் படிப்பை மூன்றாண்டுகளில் முடிக்கலாம். அதன் பின், அவர்கள் முழு நேர விரிவுரையாளர்களாக பணியாற்றலாம்.இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *