சென்னை:ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் வழங்குவதை, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.இப்பொருட்களின் வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையிலும், சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் பொருட்களும், மலிவு விலையில் வழங்கப்படும் 10 மளிகைப் பொருட்களும், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply