சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

karunaசென்னை,​​ ஏப்.9:​ சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது என்று முதல்வர் ​ கூறினார்.​ அதே சமயம்,​​ தாங்கக் கூடியவர்களுக்கு சிறிய அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

​ சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ​டி.​ யசோதா,​​ “”மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது.​ மின் வெட்டு தொடரும் நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தினால் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.​ எனவே மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது” என்றார்.

​ அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி அளித்த விளக்கம்:

“மின் கட்டணம் உயரப் போகிறது’ என்று பத்திரிகைகளில் வந்த செய்திகளின் ​அடிப்படையில் இங்கே பேசியிருக்கிறார்கள்.​ மின் கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.​ அது தன்னிச்சையாக இயங்கக்கூடிய குழு.​ மின் வாரியத்தின் சார்பாக பரிந்துரைகளை இக்குழு அனுப்ப முடியும்.

​ நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.​ யாரும் பீதி அடையத் தேவையில்லை.​ தாங்கக் கூடியவர்களுக்குத்தான் மின் கட்டணத்தில் ஒரு சிறிய உயர்வு இருக்கும்.​ ​ சாதாரணமானவர்களுக்கு குறிப்பாக சாதாரண வீடுகளுக்கு நிச்சயமாக மின் வாரியம் கட்டண உயர்வை சிபாரிசு செய்யவில்லை.​ எனவே,​​ வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார் முதல்வர் கருணாநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *