மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக்

posted in: உலகம் | 0

சிட்னி: விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது.


அல் குவைதாவின் பெண் தற்கொலை படையினர் இந்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பெண்களின் மார்பில் அறுவை சிகிச்சை மூலம் இந்த வெடிக்கும் திறன் கொண்ட திரவப் பையைப் பொருத்துகின்றனர். பெண்களின் மார்பகப் பகுதியில் இயல்பாக திரவம் இருப்பதால் ஸ்கேனிங்கில் இதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

இ‌தேபோல் ஆண்களின் பின்புறத்திலும் ( அமரும் பகுதி) இதே திரவப் பொருளை நிரப்பி வெடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டு இளைஞரைப் பிடித்து விசாரித்‌த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரிட்டனில் மருத்துவம் படிக்கும் அல் கொய்தா ஆதரவாளர்கள் இது போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை பயின்று, பின் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு அல் குவைதா இயக்கத்திற்காக இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.- நமது செய்தியாளர் சுந்தர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *