ஈரோடு: தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கோடை வெயில் கொளுத்துவதால், தயிர், மோர் தேவை அதிகரித்துள்ளது. பால் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், தீவனத் தட்டுப்பாட்டால் பால் உற்பத்தி குறைந்து விட்டது.
பால் தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு, பால் கொள்முதல் விலை அதிகரிப்பு போன்ற காரணத்தால், தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை, திடீரென லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.
இதுவரை, 26 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பால் 27 ரூபாய், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் 14 ரூபாய், 6 ரூபாய்க்கு விற்கப்பட்ட 200 மில்லி 6.50 ரூபாய், மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்ட 100 மில்லி 3.50 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட எப்.சி.எம்., ஒரு லிட்டர் பால் 31 ரூபாய், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் பால் 16 ரூபாய், 6.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட 200 மில்லி ஏழு ரூபாய் என விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட, ‘டோன்டு’ பால் அரை லிட்டர் 12.50 ரூபாய், ஆறு ரூபாய்க்கு விற்கப்பட்ட கால் லிட்டர் பால் 6.50 ரூபாய், 2.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட 100 மில்லி பால் மூன்று ரூபாய், 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் அரை லிட்டர் 13 ரூபாய் என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஆரோக்யா, ஹட்சன் நிறுவனங்கள் உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளன.
Leave a Reply