மீண்டும் படைப் பிரிவைஉருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள் – இலங்கை பிரதமர்

posted in: உலகம் | 0

05-jayaratneகொழும்பு: மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.

இதற்காக படைப் பிரிவை உருவாக்கும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் இதுகுறித்துப் பேசுகையில்,

சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டத்திற்காக புலிகளின் படைப்பிரிவு மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அவசர நிலை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இலங்கையில் இப்போதும்கூட மறைந்திருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளுக்கு அனுப்புவதற்காக வெளிநாடுகளில் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருவதாகவும் அவர்களுடைய ஒரே நோக்கம் விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்பதே.

நாட்டுக்கு வெளியே உள்ள விடுதலைப்புலிகளின் வலைப் பின்னலை ஒழிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நாட்டுக்கு உள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் இறந்த முதலாமாண்டு நினைவு தினத்தன்று சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த வாரம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை கூட்டுகின்ற தயாரிப்பு வேலைகளில் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார் ஜெயரத்னே..

தாகவும் ஜெயவர்த்தனே குறிப்பிட்டார். அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழரான வழக்கறிஞர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *