வாஷிங்டன்: பாகி்ஸ்தானின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் உளவுப் பிரிவினருக்கும் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரியும் என்று அமெரிக்கா [^] குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் [^] ஹிலாரி கிளின்டன் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒசாமா பின் லேடன் மற்றும் முல்லா ஒமர் பதுங்கியுள்ள இடம் குறித்து சில பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், அதை அந்த நாடு மறைத்து வருகிறது.
அந்த நாட்டின் மூத்த தலைவர்களுக்கு இந்த விவரம் தெரியும் என்று நான் கூறவி்ல்லை. ஆனால், சில அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கலாம் என்றார்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான்போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா என்று கேட்டபோது, செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடையவர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றார் ஹிலாரி.
சில நாட்களுக்கு முன், நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கோயரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு விவகாரத்திலும் பாகிஸ்தானை ஹில்லாரி மிகக் கடுமையாக எச்சரித்தது நினைவுகூறத்தக்கது.
Leave a Reply