டெல்லி: கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியா வுக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லை. இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக பத்திரமாக உள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அசோசம் விழாவில் கலந்து கொண்ட சாவ்லா கூறுகையில், உலகையே ஆட்டிப் படைத்த பொருளாதார நெருக்கடியை மிகவும் திறமையாக சமாளித்த நாடு இந்தியா. எனவே கிரீஸில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலால், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது.
நாம் கிரீஸ் பொருளாதார பாதிப்பின் தாக்கத்திலிருந்து நீண்ட தூரம் உள்ளோம். அது நம்மை அண்டாது. சர்வதேச பொருளாதார நெருக்கடியையே திறம்பட சமாளித்தவர்கள் நாம் என்பதை மறந்து விடக் கூடாது என்றார் சாவ்லா.
Leave a Reply