ஏர் இந்தியா விமானம் தீ பிடித்து எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கர

posted in: மற்றவை | 0

large_4342மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.

உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமான விபத்து நடந்தது எப்படி ? : காலை 6 .30 மணியளவில் மங்களூருவில் இறங்கும்போது வானிலை மோசமாக இருந்துள்ளது. விமானம் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதிய வெளிச்சம் கிடைக்காதததால் வழி தெரியாமல் போகவே விமானஓட்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை , விமானம் நிலைதடுமாறியது. தொடர்ந்து விமானம் தூக்கி வீசப்பட்டது. இதில் தீ பிடித்து எரிந்தது. இதில் இருந்த பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் அலறல் சப்தம் மட்டுமே போட முடிந்தது. சில நொடிப்பொழுதில் 160 உயிர்களையும் தீச்சுவாலை விழுங்கி கொண்டது. விமானம் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஓடுதளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் சிதறியபடி உயிருக்கு போராடும் பயணிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. 19 பேர் குழந்தைகள் என தெரிகிறது. இறந்தவர்கள் குறித்து முழுமையான விவரம் கிடைக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து விடும் என்றார் விமான துறை இயக்குனர் எஸ். என்.ஏ., சைதீ.

சமீபத்தில் நடந்த விமான விபத்துகள்: லிபியா விமானம் விபத்தில் சிக்கியதில் 103 பேர் இறந்தனர். போலந்து நாட்டு அதிபர் சென்ற விமானம் வெடித்து சிதறியதில் பலியானார். ஏமனி விமானம் விபத்தில் 153 பேர் பலியாயினர். சமீபத்தில் யு.ஏ.இ விமானம் தடுமாறி பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

பிரதமர் விசாரித்தார்: மங்களூரு விமானம் விபத்து குறித்து பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சருடன் நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். காங்., தலைவர் சோனியாவும் கவலை தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்தை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனை விருந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்., கட்சி அறிவித்துள்ளது.

விமானதுறை அமைச்சர் விரைகிறார்: விமான துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைகிறார். அங்கு நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை கவனிக்கிறார்.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்: விமானம் விபத்தில் சிக்கிய இடத்தில் சி.ஐ.எஸ்.எப்., படை வீரர்கள் 150 பேர்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு அவசரகால படையினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

விபத்து குறித்து விசாரிக்க ‌ஹெல்ப் லைன் : விபத்து குறித்து விசாரிக்க விமான துறை ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது. 011- 25656196 , மற்றும் 011- 25603101 ஆகும். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பயணிகளின் உறவினர்கள் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *