பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: நெல்லை மாணவி முதலிடம்; 2 வதும். 3 வதும் மாணவிகளே சாதனை

posted in: கல்வி | 0

large_6830சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர். 494 மார்க்குகள் பெற்று சிவப்பிரியா ( வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி தாளப்பட்டி கரூர் ), , நிவேதா ( பாத்திமா மேல்நிலைப்பள்ளி கூடலூர்), பிரியங்கா ( ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு), தமிழரசன் ( நேஷனல் மேல்நிலைப்பள்ளி அபிஷேகபாக்கம் புதுச்சேரி ), ஆகிய 4 பேர் 2 வது இடத்தை பிடித்துள்ளனர்.

3 வது இடத்தை பிடித்த 10 பேர் : 493 மார்க்குகள் பெற்று 10 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இதிலும் 7 மாணவிகள் தங்களது 3 வது இடத்தை பிடித்தனர். ரம்பயா (ஏ.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி புளியங்குடி தென்காசி ), ‌‌ஜெயலினி (சாராள் டக்கர் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டை ), திலகவதி (ஏ.வி., மேல்நிலைப்பள்ளி பரமக்குடி), பிரதீப்குமரார் (சவுராஷ்ட்டிரா மேல்நிலைப்பள்ளி பரமக்குடி ), ஜெயமுருகன்(நாடார் மேல்நிலைப்பள்ளி சவுத்கேட் மதுரை ), நாகராஜன் (செயிண்ட்மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மதுரை) , இந்துஜா (லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி அனியாபுரம் நாமக்கல்), ராஜ்சூர்யா ( சேரன் மேல்நிலைப்பள்ளி , புன்னம்சத்திரம், கரூர் ), ரேவதி (விவேகானந்தன் மேல்நிலைப்பள்ளி செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி) , நசுரின்பாத்திமா (செயிண்ட் ஜோசப் மேல்நி‌லைப்பள்ளி ஆரணி, செயயாறு ), ஆகிய 10 பேர் 3 வது இடத்தை பிடித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவர்கள் 79. 4 சதமும் மாணவிகள் 85. 5 சதமும் ‌தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்திற்கு மேலாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் மார்க்குகள் பெற்றுள்ளனர்.

இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உ<ழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார். மாநில முதலிடம்; 3 பாடத்தில் முதலிடம் : மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மின் ஆங்கிலம் , அறிவியல் , கணிதம் ஆகிய பாடங்களில் முதல் மார்க்கு பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இது வரை இல்லாத அளவிற்கு அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இவரது வெற்றியை அடுத்து இந்தப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அளவிலா மகிழ்ச்சியில் திகைத்து போயினர். பாடவாரியாக முதல் இடம் பெற்றவர்கள் : தமிழ்: விஷ்ணு பாரதி, 99 மார்க்கு , என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் ஆங்கிலம்: ஜாஸ்மின், 99 மார்க்கு, எம்.பி.எல். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி கணக்கு: எஸ்.ஜாஸ்மின், 100 மார்க்கு, எம்.பி.எல். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி அறிவியல்: எஸ்.ஜாஸ்மின், 100 மார்க்கு, எம்.பி.எல். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி சமூக அறிவியல்: கே.கே. நிவேதா, 100 மார்க்கு, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வு : ஓ.எஸ்.எல்.சி., தேர்வு வாரியத்தில் , தேர்வு எழுதியவர்களில் கரூர் பள்ளப்பட்டி யு.எச்., ஓரியன்டல் அராபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பமீதா பாணு, ஜயினப் சஹானஜ் ஆகியோர் 500க்கு 476 மார்க்குகள் பெற்று முதலிடம் பி‌டித்துள்ளார். 2ம் இடத்தை 473 மார்க்குகள் பெற்று நசிஹா பெற்றுள்ளார். 3ம் இடத்தை 472 மார்க்குள் பெற்று சுகைனா பாத்திமா, முகமது ரெய்ஹான் ஆகியோர் ‌பெற்றுள்ளனர். மெட்ரிகு‌லேஷன் பள்ளி முடிவுகள் : மெட்ரிகு‌லேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் ‌கோபிச்செட்டிப்பாளையம் மாணவி பவித்ரா 500க்கு 495 மார்க்குள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை சென்னை மொகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஸ்ரீவதனா 493 மார்க்குள் பெற்று பிடித்துள்ளார். 3ம் இடத்தை பொன்னேரி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி 492 மார்க்குள் பெற்று பி‌டித்துள்ளார். ஆங்கிலோ இந்தியன்: கோவை புனித பிரான்சிஸ் ஏ.ஐ., பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ரெணி ஏஞ்சல்ஸ் 483 மார்க்குகள் பெற்றும், கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி நம்ரிதா 483 மார்க்குகள் பெற்றும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2ம் இடத்தை 3 பேர் பிடித்துள்ளனர். திருச்சி புனித ஜோசப் பள்ளி அபிநயா , கோவை புனித பிரான்சிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீ அரவிந்தினி, தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணவி சந்தோசினி ஆகியோர் 482 மார்க்குகள் பெற்று 2ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.3ம் இடத்தை 481 மார்க்குகள் எடுத்து 4 பேர் பிடித்துள்ளனர். திருச்சி புனித ஜோசப் பள்ளி மாணவி ஸ்ருதி ஷிவானி, சேலம் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி காவ்யா, திருச்சி புனித ஜோசப் பள்ளி மாணவி பவித்ரா மீரா, தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஸ்ருதி சங்கரி ஆகியோர் பெற்றுள்ளனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில், எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய போர்டுகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்தன. இத்தேர்வை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை, இன்று காலை 9 மணிக்கு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்த்ராதேவி வெளியிட்டார். தேர்வு முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *