மருத்துவமனைக்குச் சென்று மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார் முதல்வர்: உண்ணாவிரதம் வாபஸ்

posted in: அரசியல் | 0

28mkசென்னை, மே 28: மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் கருணாநிதி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர்.

÷மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை தருவது தொடர்பான கோரிக்கை ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.

÷சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள சிறப்பு ஆசிரியர் பள்ளியில் படித்த 72 பார்வைற்றோருக்கு அரசு ஆசிரியர் பணி வழங்கக் கோரி மே 26 முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மாற்றுத்திறனாளிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

÷இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் (மே 27) அவர்களது உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதனால் பலர் சோர்வடைந்தனர். அவர்களை வியாழக்கிழமை இரவு அரசு பொதுமருத்துவமனைக்கு போலீஸôர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பெற மறுத்து மருத்துவமனை வளாகத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

÷இந்நிலையில், முதல்வர் கருணாநிதி, காலை 9.15 மணிக்கு அரசு பொது மருத்துமனைக்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். ÷சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துபேசி ஒரு வாரத்தில் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களிடம் உறுதியளித்தார்.

÷முதல்வரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். ÷இதுகுறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வைத்திறன் இழந்தவர்களிடம் பேசியபோது, “ஒரே பள்ளியில் படித்த சிலருக்கு வேலை வழங்கிவிட்டு சிலருக்கு வழங்காதது வேதனையைத் தருகிறது. முதல்வரே நேரில் வந்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உறுதி அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *