1,200 முன்னாள் பெண் புலிகளுக்கு வேலைவாய்ப்பு

posted in: உலகம் | 0

கொழும்பு, மே 30: முன்னாள் பெண் புலிகள் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பை இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது.

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப்புலிகளை இலங்கை அரசு ஓடுக்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ராணுவத்தினரிடம் பிடிபட்ட புலிகளுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண் புலிகளுக்கு வேலைவாய்ப்புத் திட்டங்களையும் இலங்கை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பெண் புலிகள் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க கொழும்பைச் சேர்ந்த டிரைஸ்டார் அப்பேரல் எனப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.

முதலாவதாக 150 பேருக்கு வேலைவாய்ப்பை அந்த நிறுவனம் அளிக்கிறது. அவர்கள் திங்கள்கிழமை முதல் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் செல்லவுள்ளனர்.

இதுகுறித்து டிரைஸ்டார் நிறுவனத்தின் தலைவர் தேஷபந்து குமார் தேவப்புரா கூறியதாவது: திரிகோணமலை கிழக்கு மாகாண பகுதியில் புதிதாக ஆடைத் தொழிற்சாலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த ஆலையில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும். முதலாவதாக 150 முன்னாள் பெண் புலிகளுக்கு வேலை கொடுத்துள்ளோம். படிப்படியாக மீதமுள்ள முன்னாள் பெண் புலிகளுக்கும் வேலை அளிக்கப்படும் என்றார் அவர். கொழும்பிலிருந்து வெளியாகும் சன்டே அப்சர்வர் பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *