காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் ஏறத்தாழ இறுதி செய்துவிட்டதாக தெரிகிறது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் அஷ்டமி, நவமியாக இருப்பதால் இன்று இரவே கூட வெளியாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்திலிருந்து காலியாகவுள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி.,க் களுக்கான இடங்களுக்கு தி.மு.க., தரப்பில் செல்வகணபதி, தங்கவேலு, கே.பி.ராமலிங்கம் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அந்த மூன்று பேருமே மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவுள்ள இரண்டு இடங்களுக்கு மனோஜ்பாண்டியன், கே.வி. ராமலிங்கம் ஆகிய இருவரது பெயர்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.ஒரே ஒரு இடத்தை மட்டும் வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, இன்னும் யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை. அக்கட்சியின் வழக்கத்தின்படி கடைசி வரை சஸ்பென்ஸ் காக்க வைத்துவிட்டு கடைசி நாளில் மட்டுமே அறிவிப்பு வெளியிடும்.
அந்த வகையில் வரும் (7ம் தேதி) திங்கட்கிழமையுடன் மனு தாக்கல் முடிவடையவுள்ளதால், அதற்குள் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டாக வேண்டும்.
தமிழக ராஜ்ய சபா சீட்டுக் கான வேட்பாளர் யார் என்பது குறித்தும் அந்த தகவல் எப் போது வெளியாகும் என்பது குறித்தும் டில்லி மேலிடத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 250 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் 71 பேர் உள்ளனர். இம்முறை பதவிக்காலம் முடிவடையவுள்ள 51 பேரில் 18 பேர் காங்கிரஸ் எம்.பி.,க்கள். அதனால், எம்.பி.,க்களின் பலத்தை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தரப் பில் மொத்தம் 14 வேட்பாளர்கள் வரை தேர்வு செய்தாக வேண்டியுள்ளது. எனவே, யாரை நியமனம் செய்வது என்பது குறித்து பெரிய அளவில் ஆலோசனை நடத்தி ரிஸ்க் எடுத்து அதன்பிறகு தேர்வு செய்யும் நிலையில் மேலிடம் இல்லை.தவிர ஒவ்வொரு பகுதிக்கும் பிரதிநிதித்துவம், ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவம், கட்சி மற் றும் மக்கள் மத்தியில் செல் வாக்கு என பல்வேறு அம்சங் களை எல்லாம் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின் போதுதான் அதிக கவனம் செலுத்தப்படும்.
இது ராஜ்யசபா தேர்தல் மட்டுமே. இதற்கு அவையில் நடக்கும் பிரச்னைகளை சமாளிக்கவும், முக்கிய பிரச்னைகளில் போதிய அறிவுடனும், விவாதங்களில் பங்கேற்று திறம் பட பேசும் ஆற்றலும் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க முடியும். எந்த பிரச்னையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு இரண் டாவது வாய்ப்பும் வழங்குவது என காங்கிரஸ் ஒரு மரபை வைத்துள்ளது.ராஜ்யசபா எம்.பி., சீட் கேட்டு நிறைய விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாய்ப்பு கிடைத்து தோற்றவர்கள், புதியவர்கள் உள்ளிட்ட பலபேரும் கேட்டுக் கொண்டிருந்தாலும், கட்சிக்கென இருக்கும் மரபுதான் இப்போதைய ராஜ்யசபா வேட் பாளர் தேர்வுக்கும் பொருந்தும்.அந்த வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 14 வேட்பாளர்களது பெயர்களை மேலிடம் பத்து நாட்களுக்கு முன்பாகவே இறுதி செய்துவிட்டது.
இதில், தமிழக வேட்பாளர் யார் என்பதும் அடக்கம். அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி. தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும்.சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் அஷ்டமி மற்றும் நவமி வருகிறது. நல்லநாள் பார்த்து வெளியிட வேண்டுமென கருதினால், இன்று இரவேகூட வெளியிடப்பட கூடும். அப்போதுதான் திங்கட்கிழமை அன்று மனு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply