இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பிரிஸ்டல்-மைர்ஸ்

3511121புதுடில்லி : அமெரிக்க முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிரிஸ்டல் – மைர்ஸ் ஸ்குயிப் நிறுவனம் , இந்தியாவில் குறைந்த விலையிலான மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிரிஸ்டல்-மைர்ஸ் ஸ்குயிப் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அலோக் சோனிக் கூறுகையில், சர்வதேச அளவில் தங்களது நிறுவனத்தின் விற்பனை 19 மில்லியன் டாலர்களாக உள்ளதாகவும், மேலும் தங்களது விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச அளவில் தலைசிறந்த 10 கம்பெனிகளுள் ஒன்றான தங்கள் கம்பெனி, சமீபத்தில் ஆங்கிளைசா ( சாக்சாகிளிப்டின்) எனும் நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இதன விலை ரூ.38 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3 ஆண்டுகளுக்குள் 6 புதிய மருந்து‌களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமி்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார். இந்தியச் சந்தையில் கடும் போட்டி இருப்பதாகவும், தடைகளை மீறி தங்களது நிறுவனம், இந்தியச் சந்தையில் நிலைத்த இ‌ட்த்தைப் பிடிக்கும் என்றும், இன்னும் 5-7 ஆண்டுகளில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பெங்களூரில் ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளதாகவும், அந்த மையத்தில் ஹெபாடைட்டிஸ் சி , அல்ஜீமியர்ஸ் உள்ளிட்ட 35 வகையான நோய்களுக்கு தீர்வு காணப்படும் முயற்சியில் ஆய்வுகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *