சென்னை : வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
இதுதொடர்பாக, போர்டு இந்தியா நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான மிக்கேல் போன்ஹாம் வெளி்யிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தங்களது நிறுவனம் முதற்கட்டமாக, 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் ஹை-கம்பி்ரஷன் பெட்ரோல் இஞ்ஜின்களை ஆட்டோ அலையன்ஸ் தாய்லாந்து எனும் நிறுவனத்திற்கு அனுப்ப இருப்பதாகவும், இதன் மூலம் தங்களது நிறவனத்தின் நெடுநாளைய கனவு, நனவாகியிருப்பதாக அவர் தெரிவி்த்தார். தங்களது நிறுவனம், 2008ம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்காவிற்கு டீசல் பவர் டிரெயின்களை ஏற்றுமதி் செய்து வருவதாகவும், தங்களது நிறுவனம் மாதம் 2,500 இஞ்ஜின்களை ஏற்றுமதி செய்ய திட்டம் வகுத்துள்ளதாகவும், தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து மட்டுமின்றி ஆசிய – பசிபிக் நாடுகளுக்கும் இஞ்ஜின்களை ஏற்றுமதி செய்ய உத்தேசித்திருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply