புதுடில்லி: கல்வி கடனுக்காக மாணவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடன் வாங்கியுள்ள மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 4.5லட்சம் அளவில் இருக்க வேண்டும் எனவும் அதன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரையில் வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் அது அம் மாணவனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வங்கிகள் சங்கத்துடன் இணைந்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
Leave a Reply