பீஜிங் :சீனாவில் உள்ள பிரபல தொழிற்சாலையில் மகாத்மாவின் அகிம்சை வழியில், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தெற்கு சீனாவில் ஹோண்டா கார் தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்ட தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள், தங்களுக்கான ஊதியத்தை அதிகரித்து தர வேண்டும் என்றும், பணிபுரியும் இடத்தில் போதிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், போராட்டத்தில் குதித்தனர்.சீனாவில் போராட்டம் என்றால் வழக்கமாக தொழிற்சாலையையும், அங்கு உள்ள இயந்திரங்களை சேதப்படுத்துவது, நிர்வாக தரப்பினருடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நடைமுறைகள் இருக்கும். ஆனால், இந்த முறை மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர், தொழிலாளர்கள்.நிர்வாகத்துடன் ஒத்துழைக்க மறுத்து, அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை பார்த்து, ஹோண்டா நிர்வாகம் ஆச்சர்யம் அடைந்தது.
இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய அகிம்சை வழியிலான போராட்டம் எங்களை மிகவும் கவர்ந்தது. அதை முன்மாதிரியாக வைத்தே, நிர்வாகத்துடன் ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தினோம். சிறிய அளவில் கூட வன்முறை நடக்கவில்லை. இந்த போராட்டம் எங்களுக்கு புதுமையாக இருந்தது.இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்
Leave a Reply