பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்

posted in: மற்றவை | 0

வாஷிங்டன் : “பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது.

எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *