அமெரிக்காவில் 4,12,000 கார்களை திரும்பப் பெறுகிறது டொயட்டோ

டோக்கியோ : ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயட்டோ நிறுவனம், ஸ்டீயரிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அமெரிக்காவில் 4,12,000 கார்க‌ளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக டொயட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இதுகுறித்து தாங்கள் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆய்வின் முடிவில் கார் ஸ்டீயரிங்கில் கோளாறு ஏற்பட்டு வருவதாகவும், இதனையடுத்து, 2000-2004ம் ஆண்டு மாடல் ஏவலான் சேடான் வகை கார்களில் சில சமயங்களில் ஸ்டீயரிங் லாக் பார் உடைந்து விட்டதாகவும் 3,73,000 கார்களையும், 2003-2007 மாடல் எல்எக்ஸ்470 ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி கார்களில் கியட் மாற்றும் ‌போதும், ஸ்டீயரிங்கில் ஷாப்ட்டை கையாளும்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால் 39,000 கார்கள் ஆக மொத்தம் 4,12,000 கார்களை திரும்ப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *