சிபிஎஸ்ஈ பிளஸ் 2-சாதித்த ஊனமுற்ற சென்னை மாணவர்கள்

posted in: கல்வி | 0

டெல்லி: சிபிஎஸ்ஈ பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற 11 ஊனமுற்ற மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்ஈ தேர்வுகள் சென்னை, அஜ்மீர், பஞ்சகுலா மண்டலங்களில் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. டெல்லி மண்டல முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இத் தேர்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்ஈ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா கூறுகையில்,

இந்தாண்டு 1,034 ஊனமுற்ற மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 225 பேர் கண்பார்வை இல்லாதவர்கள், 35 பேர் காது கேளாதவர்கள், 564 உடல் ஊனமுற்றவர்கள். இதில் 916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 8 மாணவர்கள், 3 மாணவிகள் என 11 பேர் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மற்ற நான்கு பேரில் இருவர் டெல்லி மாணவர்கள். தலா ஒருவர் பஞ்சலகுலா மற்றும் அலகாபாத் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *