நடிகர் சிவக்குமார் அளவுக்கு சிந்தனையாளர் சிவக்குமாரை நிறையப் பேருக்குத் தெரியாது.
அவருடைய நடிப்பைப் போல அவருடையச் சிந்தனையும் மிதமானது, மென்மையானது. காற்றுதான் என்றாலும் தென்றலும் புயலும் எப்படி வேவ்வேறானவையோ அதுபோல் சிவக்குமாரின் மென்மையான கருத்துக்களில் ஆக்ரோஷமும் ஒளிந்திருக்கும்.
தாய் – மனைவி – மகள் என்ற தலைப்பில் அவர் பேசியதைக் கேட்டால் நம்மை சாட்டையால் அடிப்பதுபோல வலிக்கிறது. ஒரு பெண்ணை எப்படியெல்லாம் நாம் கொடூரமாக படுத்தி எடுக்கிறோம் என்பதை, தன்னுடைய வாழ்வில் நடந்தவற்றையே ஒளிவு மறைவில்லாமல் எடுத்துச் சொல்லி (மனைவி அமர்ந்திருக்க அவர் பேசிய பேச்சு இது) ஆண்களின் வன்மையான மனங்களை சுளுக்கெடுக்கிறார் சிவக்குமார்.
திரையுலகின் மார்க்கண்டேயன், இதர பெண் வாசனை பக்கத்தில் வரமுடியாத உத்தமசீலன், பிறருக்குத் தெரியாமல் பிறருக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருக்கும் தாராளன் சிவக்குமார் தன்னிடமும் இருந்த சில குறைகளைச் சுட்டிகாட்டும்போது, இவர்போல் வருமோ எனத் தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றும்!
பகுதி 1: –
Thanks : tamilvanan.com
malavai gani
arumaiyana pechu! thank you
gugan
i want full audio of sivakumar