கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சேவக் அதிரடியாக 97 ரன்கள் விளாச, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.
முன்னதாக சமரவீரா சதம் கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் “டிராவில்’ முடிந்தது. இதனையடுத்து தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது இலங்கை அணி.
மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கொழும்புவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது.
சமரவீரா சதம்: நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஓஜா சுழலில் அசத்தினார். இவரது பந்து வீச்சில், 45 ரன்களுக்கு அவுட்டானார் மாத்யூஸ். அடுத்து வந்த பிரசன்னாவையும் (9) வெளியேற்றி நம்பிக்கை அளித்தார் ஓஜா. மறுமுனையில் அபாரமாக ஆடிய சமரவீரா, டெஸ்ட் அரங்கில் 12 வது சதம் கடந்தார். பின்வரிசையில், ரந்திவ் (8), மலிங்கா (4), மெண்டிஸ் (3), வெலகேதரா (4) விரைவில் பெவிலியன் திரும்பினர். 138 ஓவரில் ஆல்-அவுட்டான இலங்கை அணி, 425 ரன்கள் எடுத்தது. 137 ரன்களுடன் (12 பவுண்டரி, 1 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் சமரவீரா.
இந்தியா தரப்பில் ஓஜா 4, இஷாந்த் 3 விக்கெட் வீழ்த்தினர்.
விஜய் ஏமாற்றம்: பின் முதல் இன்னிங்சை ஆடியது இந்திய அணி. முரளி விஜய், சேவக் இந்திய அணிக்கு துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மலிங்கா வேகத்தில் வெளியேறினார் விஜய் (14). அடுத்து வந்த டிராவிட், வழக்கத்துக்கு மாறாக அதிரடியாக ஆடினார். இவர் 23 ரன்களுக்கு (5 பவுண்டரி) அவுட்டனார். மறுமுனையில் டெஸ்ட் அரங்கில் 23 வது அரை சதம் கடந்தார் சேவக்.
சேவக் அதிரடி: பின்னர் சேவக்குடன், சச்சின் இணைந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. நேற்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. சேவக் (97), சச்சின் (40) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அதிக ரன் குவிக்கலாம்.
7 ஆயிரம் ரன்கள்
கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில், இந்திய வீரர் சேவக் 70 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 7000 ரன்களை எட்டிய 6 வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 38 வது வீரரானார். இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ள சேவக் 7027 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் எட்டிய இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன்
சச்சின் 169 13782
டிராவிட் 141 11460
கவாஸ்கர் 125 10122
லட்சுமண் 113 7256
கங்குலி 113 7212
சேவக் 79 7027
* டெஸ்ட் போட்டிகளில், அதிக விரைவாக 7000 ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 2 வது இடம் பிடித்தார் சேவக். 134 இன்னிங்சில் 7000 ரன்களை எட்டியுள்ளார் சேவக். இப்பட்டியலின் முதலிடத்தில் இங்கிலாந்தின் ஹம்மண்ட் (131 இன்னிங்ஸ்) உள்ளார். மூன்றாவது இடத்தில் சச்சின் (136 இன்னிங்ஸ்) உள்ளார்.
என்ன ஆச்சு டிராவிட்?
இந்திய “பெருஞ்சுவர்’ என்று வர்ணிக்கப்படும் டிராவிட், தொடர்ந்து சொதப்பி வருகிறார். நேற்று 23 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இத்தொடரில் இதுவரை (18, 44, 3, -, 23) மொத்தம் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சச்சின், சேவக் ஆகிய அனுபவ வீரர்கள் அசத்தி வரும் நிலையில், டிராவிட் மட்டும் தேறாதது ஆச்சரியம் அளிக்கிறது.
சச்சினுக்கு பாராட்டு
அதிக டெஸ்ட் போட்டிகளில் (169) விளையாடி புதிய சாதனை படைத்த இந்திய வீரர் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் மீரா குமார் கூறுகையில்,”” கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சச்சின். அவரது சாதனைகள், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, ஊக்கம் அளிப்பதாய் அமைந்துள்ளது,” என்றார்.
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா (கே) தோனி (ப) இஷாந்த் 8 (15)
தில்ஷன் -ரன் அவுட் (முரளி விஜய்) 41 (70)
சங்ககரா (கே) சேவக் (ப) ஓஜா 75 (114)
ஜெயவர்தனா எல்.பி.டபிள்யு., (ப) ஓஜா 56 (154)
சமரவீரா -அவுட் இல்லை- 137 (288)
மாத்யூஸ் எல்.பி.டபிள்யு., (ப) ஓஜா 45 (84)
பிரசன்னா எல்.பி.டபிள்யு., (ப) ஓஜா 9 (41)
ரந்திவ் (கே) டிராவிட் (ப) சேவக் 8 (30)
மலிங்கா (கே) + (ப) மிஸ்ரா 4 (4)
மெண்டிஸ் (கே) ரெய்னா (ப) இஷாந்த் 3 (41)
வெலகேதரா (கே) தோனி (ப) இஷாந்த் 4 (3)
உதிரிகள் 35
மொத்தம் (138 ஓவரில் ஆல்-அவுட்) 425
விக்கெட் வீழ்ச்சி: 1-15 (பரணவிதனா), 2-102 (தில்ஷன்), 3-157 (சங்ககரா), 4-241 (ஜெயவர்தனா), 5-330 (மாத்யூஸ்), 6-359 (பிரசன்னா), 7-381 (ரந்திவ்), 8-386 (மலிங்கா), 9-421 (மெண்டிஸ்), 10-425 (வெலகேதரா).
பந்து வீச்சு: மிதுன் 22-2-78-0, இஷாந்த் 23-6-72-3, மிஸ்ரா 42-3-140-1, ஓஜா 46-10-115-4, சேவக் 5-0-8-1.
இந்தியா
முரளி விஜய் (கே) மெண்டிஸ் (ப) மலிங்கா 14 (35)
சேவக் -அவுட் இல்லை- 97 (87)
டிராவிட் எல்.பி.டபிள்யு., (ப) மாத்யூஸ் 23 (26)
சச்சின் -அவுட் இல்லை- 40 (66)
உதிரிகள் 6
மொத்தம் (35 ஓவர் முடிவில் 2 விக்.,) 180
விக்கெட் வீழ்ச்சி: 1-49 (முரளி விஜய்), 2-92 (டிராவிட்).
பந்து வீச்சு: மலிங்கா 11-1-52-1, வெலகேதரா 9-0-65-0, மெண்டிஸ் 7-1-32-0, மாத்யூஸ் 4-0-13-1, ரந்திவ் 4-0-17-0.
Leave a Reply