வேலூர் : “”கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவி விலக தயார்,” என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வேலூர் கோட்டை அருகே பெரியார் பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தி.மு.க.,வினருக்கு வீடுகள் ஒதுக்கி முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா குற்றம் சுமத்திருக்கிறார். ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு இது போல குற்றம் சுமத்தி இருப்பது சரியல்ல. அவர் பொறாமையால், வயிற்று எரிச்சலுடன் இப்படி பேசுகிறார். இந்த குற்றசாட்டுக்கு ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டு போதுமான ஆதாரத்துடன் குற்றசாட்டை நிரூபித்தால் நான் பதவி விலக தயார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Leave a Reply