புதுடில்லி:டீசல் விலை நிர்ணயத்தில் இரண்டு விதமான கொள்கைகள் இல்லை என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.டில்லியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த, “பெட்ரோடெக் – 2010′ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்று முரளி தியோரா பேசியதாவது:பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக, அரசு பரிசீலித்து வருகிறது. டீசலுக்கு இரண்டு விதமான விலையை நிர்ணயம் செய்வதில் எவ்விதமான சாத்தியக்கூறுகளும் இல்லை.”மெர்சிடிஸ்’ கார்களில் செல்பவர்களுக்கெல்லாம் அரசு ஏன் லிட்டருக்கு மூன்று ரூபாய் மானியம் வழங்க வேண்டும்? அதிகப்படியான மானியம் வழங்குவதால், அரசுக்கு கூடுதலாக நிதிச்சுமை ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டே, பெட்ரோலிய நிறுவனங்களே எண்ணெய் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.மானியம் வழங்குவதிலும் இரண்டு விதமான கொள்கைகள் இல்லை. மானியங்கள் விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், அது எல்லாருக்குமே பொருந்தும்.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
Leave a Reply